முகப்பு நிறுவனங்கள் நீர்ப்பாசன திணைக்களம்

நீர்ப்பாசன திணைக்களம்

 

நீர்ப்பாசன திணைக்களம் என்பது 110 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட 'ஏ வகுப்பு' அரசாங்க திணைக்களமாக இருக்கின்ற அதே நேரத்தில் அது நீர்ப்பாசன விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் நிர்வாகம் என்ற கட்டளையின் கீழ் இயங்குகின்றது. நீர்ப்பாசன திணைக்களம் உரித்தாகின்ற அமைச்சு அமைச்சரின் சார்பில் நிர்வாகத்தையும் பணிப்புரைகளையும் நடைமுறைப்படுத்துகிறது. உள்ளூர் நீர் வளங்களை ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான பொறுப்புகளை வகிக்கின்ற அரசாங்கத்தின் பிரதான அமைப்பு என்ற வகையில் நீர்ப்பாசன திணைக்களத்தினால் அமைச்சின் கொள்கைகளும் நிகழ்ச்சித்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

நீர்ப்பாசன திணைக்களத்தின் நோக்கங்கள்

 • நீர்ப்பாசன நீர் வழங்கள் விவசாயம், நீர் மின்சாரம், வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துதல், வீட்டு பயன்பாடு. கைத்தொழில்களுக்காகப் பயன்படுத்துதல், நீர் வாழ் உயிரின அபிவிருத்திக்காக காணிகளையும் நீர்வளங்களையும் அபிவிருத்தி செய்தல்.
 • நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் கருத்திட்டத்தின் ஊடாக பயிர் செய்யக்கூடிய நிலப்பகுதிக்கு நீர்ப்பாசன வசதிகளையும் நீர் வழங்கல் வசதிகளையும் பெற்றுக் கொடுத்தல்.
 • கிராமிய கமக்காரர்களின் விவசாய வருமானத்தை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதன் மூலம் அவர்களின் வறுமையை ஒழித்தல்.
 • நிலைபேறான விவசாய கைத்தொழிலுக்காக நீரை முகாமைத்துவப்படுத்துதல்.
 • ஒன்றிணைந்த நீர் வள முகாமைத்துவம் மற்றும் பாரிய, நடுத்தர அளவிலான நீhப்பாசன முறைமைகள் தொடர்பில் பங்கேற்றல்.

நீர்ப்பாசன திணைக்களத்தின் நடவடிக்கைகள்

 • நிலம் மற்றும் நீர்வளங்களை ஆகக்கூடிய அளவில் பயன்படுத்தவதற்காக பல்வேறு வகையான ஆற்றுப்பள்ளத்தாக்குகளைப் பயன்படுத்துவதற்காக முன்னுரிமை திட்டங்களைத் தயாரித்தல்.
 • நீர்ப்பாசனம், நீர்மின்சாரம், வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துதல்,காணி மீட்டல் கருத்திட்டங்களின் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் தரவுகளைத் திட்டமிடல்.
 • நிலக்கீழ் நீரைப் பாதுகாத்தல், திருப்புதல் மற்றும் விநியோகத்திற்கு நீர்னப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டங்களை அமைக்கும் கருத்திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் விவசாயிகள் உணவுப்பயிர்களை உற்பத்திக்காக பயிர் செய்யும் பொருட்டு புதிய நிலங்களுக்கும் இருக்கின்ற நிலங்களுக்கும் நீர்ப்பாசனம் வழங்கல்.
 • ஆகக்குறைந்த ஆபத்தின் கீழ் உணவுப் பயிர்களைப் பயிர் செய்யும்பொருட்டு பயிர் செய்யக்கூடிய காணிகளை மழை நீரைப் பயன்படுத்தி பயிர் செய்வதற்காக அத்தகைய காணிகளைப் பாதுகாக்கும் பொருட்டு வடிகாலமைப்பு முறைமைகள், வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாப்பு பெறும் முறைமைகள், உவர் நீரை அகற்றும் கருத்திட்டங்கள் என்பவற்றை உருவாக்குதல்.
 • மத்திய மற்றும் பிரதான நிலக்கீழ், வடிகாலமைப்பு, நீர்ப்பாசனங்களை வழங்கும் கருத்திட்டம் என்பவற்றை பராமரித்தல்,மேம்படுத்துதல்,புனர் வாழ்வு மற்றும் நீர் முகாமைத்துவம்.
 • நீர்வள அபிவிருத்தி கருத்திட்டங்களோடு சம்பந்தப்பட்ட நீர் புள்ளிவிபரவியல், புவி புள்ளிவிபரவியல், மண் எந்திரவியல், பொறியியல் புவியியல், புவியியல் தகவல் முறைமைகள், பொறியியல் மூலப் பொருட்கள் மற்றும் காணி பயன்பாடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்தல்.
 • மனித வளங்களை ஆகக்கூடியவகையில் பயன்படுத்துவதற்காக மனிதவள அபிவிருத்தி.
 • இலங்கை அரசாங்கத்தின் நிதிப் பிரமாணங்களின் பிராகாரம் நீர்ப்பாசன திணைக்களத்தின் நிதி முகாமைத்துவ முறைமை,கணக்குகள். அறிக்கைகள், கணக்காய்வு முறைமை என்பவற்றை நடைமுறைப்படுத்துதலும் பேணுதலும்.

நீர்வள அபிவிருத்தி, அடிப்படை பொறியியல், மண் அகழ்வு நிலைகள், கொன்கிரீட்டின் தரம் என்பவற்றைக் கட்டுப்படுத்துதல்,நீரியல் மாதிரிகளை பரிசீலனை செய்தல், காணி பயன்பாட்டு திட்டங்கள் போன்ற துறைகளில் ஆலோசனை சேவைகள் போன்றவற்றை அரசாங்க திணைக்களங்களுக்கு நியதிச்சட்ட நிறுவனங்கள் / கூட்டுத்தாபனங்களுக்கு, அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் ஆட்களுக்கும் வழங்குதல்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க.

நீர்ப்பாசன திணைக்களம்,
230,  மாவத்த,
கொழும்பு 07,
இலங்கை.
தொலைபேசி +94-11-2584984

தொலை நகல் +94-11-2505890

மின்னஞ்சல் இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் , இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

வெப் http://www.irrigation.gov.lk